Editorial / 2019 ஒக்டோபர் 25 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
100 வருடங்கள் பழைமை வாய்ந்த வளவே கங்கையை ஊடறுத்துச் செல்லும் வலேபொட கம்பிப் பாலம், புனரமைப்பின்றி மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாலமானது இடத்துக்கிடம் துருப்பிடித்து, பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் சில இடங்களில் பாதுகாப்பு பக்கக் கைப்பிடிகள் இல்லாமையால், பாலத்தின்மீது பயணிப்போர் ஆற்றில் விழுந்துவிடும் ஆபத்தும் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
பலாங்கொடைப் பிரதேச செயலகப்பிரிவைச் சேர்ந்த ஐந்து கிராமங்களையும் இம்புல்பே பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த ஐந்து கிராமங்களையும் சேர்ந்த 10 கிராமங்களின் பொதுமக்கள், மாணவர்கள் எனத் தினமும் பெரும் எண்ணிக்கையான மக்கள் இப்பாலத்தைக் கடந்து கிராமங்களுக்குப் பயணிக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே இக்கம்பிப் பாலத்துக்குப் பதிலாக நிரந்தரமான பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறு, பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago