2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

ஆபத்துக்கு மத்தியில் தோணியில் ஆற்றைக் கடக்கும் மக்கள்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 10 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருள்ஷான்

தெரணியகல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பாலகம கிராமவாசிகளும் பெலேன கிராமம் மற்றும் பல்லேல கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் களனி ஆற்றைக் கடப்பதற்கு இந்த
சிறிய தோணியையே பயன்படுத்துகின்றனர்.

மழைக்காலங்களில் இந்த மக்கள் எட்டியாந்தோட்டை நகருக்கு வருவதாக இருந்தால், இந்த தோனியைப் பயன்படுத்தி களனி ஆற்றை கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதிக மழைக்காலங்களில் இப்பிரதேசத்தில் இருந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பல நாள்களாக பாடசாலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவர்கள் களனி ஆற்றில் விழுந்து உயிர் தப்பிய சந்தர்ப்பங்களும் உள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். கிராமத்துடன் சந்திப்புக்கு ஜனாதிபதி தெரணியகல பிரதேசத்துக்கு வருகைத் தந்த
போது, மக்கள் தமது குறையை தெரிவித்துள்ள நிலையில், இதுவரையில் எவ்வித தீர்வும் இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X