2026 ஜனவரி 21, புதன்கிழமை

ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மவுண்ட்ஜீன் தோட்டம்

Ilango Bharathy   / 2021 ஜூலை 28 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் திணைக்களம் மற்றும் வனபாதுகாப்பு திணைக்களம்
என்பன இணைந்து வட்டவளை- மவுண்ட்ஜீன் தோட்டத்தின் ஆற்றுப்பள்ளத்தாக்கில்
இரத்தினக்கல் அகழ்வுக்கான ஆரம்ப கட்டப்பணிகளை ஆரம்பித்துள்ளமைக்கு எதிர்ப்பு
தெரிவித்துள்ள இத்தோட்ட மக்கள், இவ்வாறு இரத்தினக்கல் அகழ்ந்தால், இங்கு பாரிய சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்படுமென சுட்டிக்காட்டுகின்றனர்.


கடந்த காலங்களில் குறித்த இடத்தில் இரத்தினக்கல் அகழப்பட்டதால், அங்கு மண்சரிவு
ஏற்பட்டமையே இம்மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றமைக்கு காரணமாக அமைந்துள்ளதாக
தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த ஆற்றில் இரத்தினக்கல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டால், அதற்கு அண்மித்த
பிரதான வீதி மற்றும் வட்டவளை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதி என்பன தாழிறங்கும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேப்போல் கடந்த 4 வருடங்களுக்கு முன்னரும் இப்பகுதியில் இரத்தினக்கல் அகழ்வு
முன்னெடுக்கப்பட்ட போது, சில அரசியல்வாதிகளின் தலையீட்டால் அது தடுத்து
நிறத்தப்பட்டதைப் போன்று, இம்முறையம் இந்த விடயம் குறித்து மலையக தொழிற்சங்கத்
தலைவர்கள் தலையிட்டு இதனை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X