Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
நபரொருவரிடமிருந்து ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமல்லாது அவரையும் போக்குவரத்து பொலிஸாரையும் கத்தியால் தாக்கியதாக கூறப்படும் பெண்ணை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் தமயந்தி பெர்ணாண்டோ இன்று (27) உத்தரவிட்டார்.
தாக்குதலில் காயமடைந்த வெலி ஓயா தோட்டத்தைச் சேர்ந்த மேற்படி நபர் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரியும் தனது மனைவி அனுப்பி வைத்த பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக்கொண்டு மேற்படி நபர் வெளியே வந்துள்ளார். இதன்போது, முகத்தை முழுமையாக மூடிக்கொண்டு அங்கு வந்த பெண்ணொருவர், அவரின் தலையில் கத்தியால் தாக்கி விட்டு பணத்தை கொள்ளையடித்துகொண்டு தப்பி ஓடியுள்ளார்.
அருகிலிருந்த மக்கள் இதனை அவதானித்து கூக்குரலிட்டுள்ளதை தொடர்ந்து ஹட்டன் நகரில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர். இதன்போது, அப்பெண் தனது கையில் வைத்திருந்த காத்தியால் பொலிஸ் அதிகாரியையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
கைதுதான பெண், மேற்படி நபரின் மைத்துனியின்; மகள் எனவும் அவர் போதைவஸ்த்துக்கு அடிமையானவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago