Editorial / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்,எஸ்.கௌசல்யா,பி.கேதீஸ்,எஸ்.கணேசன்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீரேந்தும் கவுலினா ஆற்றில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 3:30 மணியளவில் 20 வயதுடைய பிரபாகரன் கஜேந்திரன் என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்களின் உதவியுடன் ஆற்றில் இருந்து சடலம் இரண்டு மணி நேரத்துக்கு பின்னரே மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago