Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 18, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 18 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவர்கள் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை (17) பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பாடசாலை மாணவர்கள் மூவரும் வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை கோனகனார பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வகுருவெல பகுதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலை மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது வீட்டின் உரிமையாளர், பாடசாலை உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகளை கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் சில காலமாக பல பாடசாலை மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பாடசாலை மாணவர்கள் மூவரும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், 49 வயதுடைய சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
17 Mar 2025