Sudharshini / 2015 ஒக்டோபர் 12 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
புஸ்ஸல்லாவை, இரட்டைப்பாதை நீவ்பீகொக் தோட்டத்தில் நபர் ஒருவர், தோட்ட மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி அவரை கைது செய்யுமாறும் அவரின் குடும்பத்தை தோட்டத்தில் இருந்து வெளியேற்றுமாறும் கோரியும் தோட்ட மக்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி நார், மது அருந்திவிட்டு வந்து தோட்ட தொழிலாளர்களையும் பிள்ளைகளையும் அடிப்பதுடன் தகாத வார்த்தைகளை பிரயோகிப்பதாகவும் கள்ளத்தனமாக தேயிலை கொழுந்துகளை இரவு வேளையில் பறித்து விற்பனை செய்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், தோட்ட அதிகாரியிடம் கலந்துரையாடி சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago