2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

இந்திய சுற்றுலாப் பயணி நுவரெலியாவில் மரணம்

Editorial   / 2023 ஏப்ரல் 26 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு,

நுவரெலியாவில் உள்ள சுற்றுலா இடங்களை  பார்வையிட வந்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார் உயிரிழந்த இந்திய  பிரஜை 68 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 தனது மனைவியுடன் கடந்த 23 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். இந் நிலையில் கடந்த 25 திகதி நுவரெலியாவுக்கு  வந்து மாலை 6:30  மணியளவில் தங்கியிருந்த  நுவரெலியா பிலக்பூல் விடுதியில் இருந்து பிரதான நகருக்கு இரவு உணவு உண்பதற்காக சென்று கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு சுகயீனம்  ஏற்பட்டுள்ளது.

அவர், உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு  கொண்டுசெல்ப்பட்டார்.  எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு  முன் மரணித்துவிட்டதாக  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா சுற்றுலா பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X