2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இந்திய பயணிகளுடன் சென்ற ஓட்டுநர் மீது குளவி கொட்டு

Janu   / 2025 ஜூலை 06 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஓட்டுநர், குளவித் தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.   

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி  நான்கு இந்திய நாட்டவர்களுடன் பயணித்த வேன் நானுஓயா ரதெல்ல குறுக்கு வழியில் நிறுத்தி பயணிகள்  புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, ​​வீதியின் அருகே ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்துள்ளது. பின்னர், பயணிகளை வேனில் ஏற்றி, ஓட்டுநர் வேனில் ஏறத் தயாராகிய போது குளவிகள் ஓட்டுநரை தாக்கியுள்ளன.

 கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற நானுஓயா பொலிஸார், சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட ஓட்டுநரின்  நிலை மோசமாக இல்லை என தெரிவித்தனர்.

மேலும் நுவரெலியாவுக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதாக ஓட்டுநர், பொலிஸாரிடம்  கூறியதையடுத்து இந்திய நாட்டவர்களையும்  அதே வேனில் நுவரெலியா வரை அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .