Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
இன ஐக்கியத்தோடும் உரிமைகளைப் பெற்றவர்களாகவும் வாழக்கூடிய இலங்கையர்களை உருவாக்க வேண்டும் என்பதே, பிரதமரின் கொள்கையாகும் என, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில், சகல உரிமைகளையும் பெற்றவர்களாக, ஏனைய மக்களுடன் மலையக மக்களையும் இணைத்துச் செயற்படுவதை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலக்காகக் கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை, மக்களின் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறுத் தெரிவித்தார். இங்குத் தொடர்ந்துரையாற்றிய அவர்,
பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள தனி வீடுகள், நாட்டின் பிரதமரின் வழிகாட்டலுக்கு அமைவாகக் கிடைக்கப்பெற்றதேத் தவிர, இந்த உரிமையை இங்குள்ள மக்கள் போராடியோ சண்டையிட்டோ பெற்றுக்கொள்ளவில்லை என்றார்.
மலையகத் தலைவர்கள் பலர், பிராஜா உரிமையைப் பற்றி அவ்வப்போது பேசுவார்கள் எனத் தெரிவித்த அவர், ஆனால், மலையக மக்களுக்கு, காணியும் வீட்டு உரிமையும் கிடைக்கும் நாளே, பிராஜா உரிமை கிடைத்த நாளாக தான் கருதுவதாகவும் இதனைப் பெற்றுக்கொடுத்த அமைச்சர் திகாம்பரம், சரித்திரம் படைத்தவராகத் திகழ்கின்றார் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
6 minute ago
7 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
7 minute ago
43 minute ago