Kogilavani / 2021 ஜனவரி 04 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
கொழும்பு-பதுளை பிரதான வீதி, இம்புல்பே பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாகல், பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, இம்புல்பே பிரதேச சபையின் தவிசாளர் சிறிலால் செனரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இப்பிரதேசத்தில் நேற்று முன்தினம் முதல் கடும்மழை பெய்து வருவதால், பொதுமக்கள் இவ்விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் மலைப்பாங்கான ஏற்கெனவே மண்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்கள், அவதானமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக இம்புல்பே பிரதேச வீதியின் இரு பகுதிகளிலும் மண்திட்டுகள் சரியும் ஆபத்து நிலவுவதால், அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
12 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
4 hours ago
7 hours ago