2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இராகலை நபர், யாழில் தவறான முடிவெடுத்து விட்டார்

Editorial   / 2025 மார்ச் 12 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன் 

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இராகலை தோட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் சந்திரபோஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த நபர் ஆவரங்கால் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில் இவர் கடந்த 9ஆம் திகதி கோப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்று, அந்த வீட்டில் உள்ள ஆட்டு கொட்டகையில் தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இதனை அவதானித்த வீட்டில் உள்ளவர்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சடலத்தை மீட்ட பொலிஸார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னர்,  சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X