2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இரட்டைச் சிசுக்களுடன் வீதியில் தத்தளித்த பெற்றோர்

R.Maheshwary   / 2022 ஜூலை 10 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உபெந்திர பிரியங்கர

வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயொருவர், வீட்டுக்குச் செல்வதற்கு வாகன வசதி இன்மையால் நடு வீதியில் குழந்தைகளுடன் நின்ற சம்பவம் ஒன்று நேற்று (9) கலவான பகுதியில் பதிவாகியது.

இதன்போது கலவான பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் ,தனது பிரத்தியேக லொறி மூலம் தாயையும் சிசுக்களையும் வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தார்.

புதிதாக பிறந்த இரட்டை சிசுக்களுடன் தாயும் தந்தையும் பல மணிநேரம் வெயிலில் பஸ்ஸுக்காக காத்திருந்த நிலையிலேயே, கலவான பொலிஸார் இந்த மனிதாபிமான உதவியைச் செய்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X