2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

இரண்டாயிரத்தில் இடையூறு ஏற்படுத்திய நால்வர் கைது

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 01 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி பெருமாள், யோகேசன்

மஸ்கெலியா- பிரிவுண்ஸ்விக் கிராம உத்தியோகத்தர் பிரிவின் மெட்டிங்ஹோம் தோட்டத்தில், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் 2,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவில், இடையூறு ஏற்படுத்திய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் குறித்த கொடுப்பனவு நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள் என, கிராம உத்தியோகத்தரால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நால்வரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X