Freelancer / 2023 மார்ச் 09 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
வலப்பனை தெரிப்பெய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவ்விரு பொலிஸாரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தெரிப்பெய பகுதியை சேர்ந்த இருவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு வலப்பனை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தெரிப்பெய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர், கடந்த 5ஆம் திகதி இரவு நேர ரோந்து சென்றுள்ளனர்.
இதன்போது தெரிப்பெய சமுர்த்தி வங்கி அருகில் பிரதான வீதியில் அமர்ந்து இருவர் மது அருந்தியுள்ளனர்.
அவ்விருவரிடமும் பொலிஸார் விசாரணை செய்தபோது, வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், கைகலப்பாக மாறியுள்ளது.
அதேநேரத்தில் மது அருந்திய இருவர் மீதும் பொலிஸார் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனால், பிரதேசவாசிகள் இருவரும் படுகாயமடைந்தனர்.
சம்பவத்தைக் கேள்வியுற்ற, தெரிப்பெய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து தாக்குதலுக்கு இலக்கான பொலிஸாரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் தாக்குதலை நடத்திய இருவரையும் கைது செய்துள்ளனர்.
அதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago