Kogilavani / 2020 டிசெம்பர் 18 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
இரத்தினபுரியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைவாக இரத்தினபுரி நகரிலுள்ள மூன்று பாடசாலைகளை எதிர்வரும் 23ஆம் திகதிவரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி சீவலி மகா வித்தியாலயம், கொடிகமுவ தர்மராஜ வித்தியாலயம், இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளே மூடப்படவுள்ளன.
இரத்தினபுரி நகரில் கொரோனா தொற்று அதிகரிப்பதன் காரணத்தால் அதிகூடிய அவதான நிலை ஏற்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பெகடுவ தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்ட கொரோனா தொற்று ஒழிப்பு குழு, இன்று(18) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் அவசரமாக கூடி கலந்துரையாடியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இரத்தினபுரி நகரை அண்மித்த பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாயல்களையும் இன்று(18) முதல் மூடுவதற்கு இரத்தினபுரி மாவட்ட கொரோனா தொற்று ஒழிப்பு குழு தீர்மானம் எடுத்துள்ளது.
மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாயல்களில் பக்தர்கள் இன்றி மத வழிபாடுபகளை நடத்துமாறும் இரத்தினபுரி மாவட்ட கொரோனா தொற்று ஒழிப்பு குழு கேட்டுக் கொண்டுள்ளது.
இரத்தினபுரி செலான் வங்கி சந்தி தொடக்கம் இரத்தினபுரியில் உள்ள இலங்கை போக்குவரத்துவ் சபை டிப்போ சந்தி வரை உள்ள அனைத்து வியாபார நிலையங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இன்று(18) முதல் மூடுவதற்கும் மேற்படிக் குழு தீர்மானித்துளளது.
அத்தோடு இரத்தினபுரி நகரின் மணிக்கூட்டுக்கோபுரம், இரத்தினபுரி நகரின் மாமரத்து சந்தி, இரத்தினபுரி தெமுவாத்த ஆகிய பகுதிகளில் மாணிக்ககல் வியாபாரத்துக்கும் தடை விதிக்கப்பட்டள்ளது.
மாணிக்ககல் வியாபாரம் செய்வதற்கென இரத்தினபுரி சீவலி மைதானத்தைப் பயன்படுத்தமாறும் இரத்தினபுரி மாணிக்கக்கல் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று ஒழிப்புக் குழு அறிவித்தல் விடுத்துள்ளது.
இரத்தினபுரி நகரில், வீதியோர வியாபாரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026