2026 ஜனவரி 21, புதன்கிழமை

இரத்தினபுரியில் 1,178 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்த உதய

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக இரத்தினபுரி மாவட்ட தொற்றுநோய் விசேட வைத்தியர் லக்மால் கோனார தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், இரத்தினபுரி சுகாதார வைத்திய பிரிவுகள் பத்தொன்பதில் இதுவரை 344 பேர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்றும் இதற்கமைய, பெல்மடுல்ல, நிவித்திகல,கலவான, கிரிஎல்ல மற்றும் எலபாத ஆகிய பகுதிகளில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன என்றார்.

கடந்த வருடம் எலிக்காய்ச்சல் அதிகரித்த மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம்
சுட்டிக்காட்டப்பட்டதாகவும் இவர்களில் 35 பேர் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

எலிக்காய்ச்சலால் பீடிக்கப்படுபவர்களில் 99 சதவீதமானவர்கள் மண் சார்ந்த தொழில்களுடன்
ஈடுபடுபவர்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென்றார். அத்துடன், வயல் நிலங்களில் பட்டம் விடும் சிறுவர்கள், வெள்ளத்தின் பின்னர் வீடுகளை சுத்தம் செய்பவர்கள், காடுகளில் பயிற்சிகளில் ஈடுபடும் இராணுவம் மற்றும் பொலிஸார், கீரைத் தோட்டங்களில் வேலைசெய்பவர்களே எலிக்காய்ச்சலால் பீடிக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர்,
கடந்த வருடம் மாத்திரம் இரத்தினபுரி மாவட்டத்தில் 1,178 பேருக்கு எலிக்காய்ச்சல்
ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X