Kogilavani / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினால், இரத்தினபுரி மாவட்டம் ஹப்புகஸ்தன்ன - டேனாகந்த பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்று நேற்று (12) திறந்து வைக்கப்பட்டது.
கொரோன தொற்றால் தொழில்வாய்ப்பை இந்தவர்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் 10 இலட்சம் ரூபாய் செலவில் ஆடைத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு இளைஞர் யுவதிகளிடம் கையளிக்கப்பட்டது.
உதவும்கரங்கள் அமைப்பின் தலைவர் ஆர்.ராமேஸ்வரனின் முயற்சியாலும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை உறவுகளின் கோரிக்கைக்கும் அமைய இந்தத் தொழிற்சாலைத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் உபதலைவர் கே.சிவசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில், டேனாகந்த ஸ்ரீ ஆதிவிநாயகர் கோவில் பிரதமகுரு சிவாச்சாரியார் பிரமஸ்ரீ உஷாந்தன் சர்மா, அமைப்பின் ஆலோசகரும் மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளர் டொக்டர் எஸ்.கருணாகரன், அமைப்பின் செயலாளரும் மகரகம தேசிய கல்வி நிறுவனத்தின் பகுதி நேர விரிவுரையாளர் எஸ்.தயாலன், உதவும் கரங்கள் அமைப்பின் உபபொருளாளரும் டேனாகந்த விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலத்தின் அதிபருமான ஏ.பிரபாகரன், அமைப்பின் உபசெயலாளர் எஸ்.பிரியந்தன் அமைப்பின் வர்த்தக அமைப்பாளரும் நிகழ்வின் ஏற்பாட்டாளருமான வி.பி.ஏகாம்பரம், விழித்தெழு அரக்கட்டளை ஒன்றியம், உதவும் கரங்கள் அமைப்பின் கேகாலை மாவட்ட இணைப்பாளர் ஆர்.அமுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.




9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026