2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இரத்தினபுரி மாவட்டத்தில் தொற்றாளர்கள் உயர்வு

Kogilavani   / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,063 ஆக அதிகரித்துள்ளதாக, இரத்தினபுரி மாவட்டச் செயலாளரும் இரத்தினபுரி மாவட்ட கொவிட் 19 கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவருமான மாலினி லொகுபோதாகம தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் கொவிட் 19 நிலைமைகள் குறித்து தகவல் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை  2,063 தொற்றாளர்கள் இனங்காணப்படள்ளதுடன், அவர்களில் 1,723 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். 

இம்மாவட்டத்தில் எஹலியகொடை பொதுச் சுகாதார பிரிவிலேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இப்பிரிவில் 628 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் 559 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலில் 523 பேர் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X