Kogilavani / 2021 ஜனவரி 04 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா நகரிலுள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்குமிழ்கள் இரவு நேரங்களில் ஒளிர்வதில்லை என்றும் இதனால், மஸ்கெலியா நகரவாசிகளும் நகருக்கு வந்துச் செல்லும் பொதுமக்களும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நகரவாசிகள், அதிகாலை வேளையில் தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகள், மாலை நேர தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள் என பலரும் பாரிய இன்னலுக்கு உள்ளாவதாகத் தெரிவித்துள்ளனர்.
நகரைச் சுற்றி காடுகள் காணப்படுவதால், இரவு வேளைகளில் வனவிலங்குகள் நகருக்குள் வந்துச் செல்வதாகவும் எனவே இரவு வேளைகளில் மஸ்கெலியா நகருக்குச் செல்வது உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இரவு நேரங்களில் மின்குமிழ்களை ஒளிரச் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகரவாசிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
4 hours ago
7 hours ago