2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இராகலையில் அரச வங்கிக்குப் பூட்டு

Kogilavani   / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

இராகலையிலுள்ள அரச வங்கியொன்றின் உதவி முகாமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, வங்கி இன்று(9) காலை மூடப்பட்டதாக, இராகலை பிரதேசத்துக்குப் பொறுப்பான  பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

உதவி முகாமையாளருக்கு, நேற்று  (8) மாலை கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதாகவும் இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

அத்துடன் தனியார் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X