R.Maheshwary / 2021 நவம்பர் 10 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இராகலை தோட்டத்தை ஊடுறுவி ஓடும் காட்டாறை, அகலப்படுத்தி ஆழப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டாறின் பெருக்கத்தால், கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் தொடர்ந்தும் பெய்து வரும் மழையினால் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், இத்தோட்டத்தில் மேற்குறித்த காட்டாறுக்கு அண்மித்த பகுதியில் குடியேறியுள்ள குடும்பங்களின் வீடுகள் மற்றும் விவசாய காணிகளுக்குள் ஆற்று நீர் உட்புகுந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இப்பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வந்த ஏழு குடும்பங்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில், தற்போது இராகலை தோட்டம் மத்திய பிரிவு தோட்டத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூர காட்டாறை அகலப்படுத்தி தூர்வாரி சுத்தப்படுத்தும் நடவடிக்கையை வலப்பனை பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இராகலை தோட்டத்தில் தொடர்ச்சியாக மழைக்காலங்களில் நிலவும் காட்டாறு வெள்ளம் பாதிப்புக்குறித்து, தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இதன் காரணமாக மேலும் மக்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்காத வகையில் ஆற்றினை அபிவிருத்தி செய்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா இடர் முகாமைத்துவ நிலைய முகாமையாளர் ஆர்.அலககோன் நம்பிக்கை தெரிவித்தார்.
26 minute ago
40 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
40 minute ago
56 minute ago