Kogilavani / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
நுவரெலியா - இராகலை, புரூக்சைட் பகுதியில், துப்பாக்கி ரவைகளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு, துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கான அனுமதி உள்ளதாக, நீதிமன்ற விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புரூக்சைட் பகுதியில், கடந்த 10ஆம் திகதி காரொன்றில் பயணித்த மூன்று சந்தேகநபர்களை விசேட அதிரடிபடையினர் மற்றும் இராணுவத்தினர் கைதுசெய்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிப் பொருட்கள் என்பவற்றை மீட்டதாகவும் இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை, நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபருக்கு துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கான அனுமதி உள்ளதாக உறுதிபடுத்தப்பட்டது.
அத்துடன் நீதிமன்ற விசாரணைகளின்போது, சந்தேகநபர்கள்வசம் துப்பாக்கி ரவைகள் மாத்திரமே காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
எனினும், பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ரவைகள் சந்தேகநபர்களிடம் இதுவரை கையளிக்கப்படவில்லை
இந்த வழக்கு மீதான விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026