Kogilavani / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
வீதி அபிவிருத்திக்குப் பொறுப்பான பொறியியலாளரின்றி, வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதால், இராகலை பிரதான நகரில், நேற்று (7) இரவு 9.30 மணியளவில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
உடப்புஸ்ஸலாவை - இராகலை பிரதான வீதியை காபட் இட்டு செப்பனிடும் பணிகளை, வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்து வருகிறது.
இருப்பினும் செப்பனிடும் பணியை முறையாக முன்னெடுக்கக் கூடிய பொறுப்புவாய்ந்த பொறியியலாளர் ஒருவர் களத்தில் இல்லாது, சாதாரண அதிகாரிகளைக் கொண்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அத்துடன், காபட் இடும் தொழிலாளர்கள் முறையாக பணியை முன்னெடுக்காது, சாதாரணமாக காபட் இட்டு வருவதை கண்காணித்த ஓட்டோ சாரதிகள், பொதுமக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், வீதி அபிவிருத்திப் பணிகளை இடைநிறுத்துமாறுகூறி நகரில் ஒன்று கூடியதைத் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டது.
சுமார் ஒரு மணித்தியாலயம்வரை நகரில் ஒன்றுகூடியிருந்த பொதுமக்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளைச் சுற்றி வளைத்து கேள்வி எழுப்பினர்.
அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்படுவதாகவும் காபட் இடுவதற்கான மூலப்பொருட்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
வீதிகள் குறுகிய காலத்தில் பழுதடையக் கூடிய வகையில் முறையற்ற தொழில்நுட்பச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என்றும் தகுதிவாய்ந்த பொறியியலாளர், பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழ், வீதி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள், பொறியியலாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துரையாடியதைத் தொடர்ந்து பதற்றம் தனிந்தது.
பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், காபட் இடும் பணி ஆரம்பமானது.
25 minute ago
33 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
54 minute ago