2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இறக்குவாணைனயில் மோதல்; ஒருவர் படுகாயம்

Gavitha   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி, சிவாணிஸ்ரீ

இறக்குவாணை நகரில் நேற்று இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இறக்குவாணை, பாராவத்தை தோட்டத்தில் சித்திரை புதுவருட பிறப்பையொட்டி, கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற கிறிக்கெட் போட்டியின்போது, இரு குழுக்களுக்கு முறுகல் நிலை ஏற்பட்டது.

தோட்ட இளைஞர்களுக்கும் நகரிலிருந்து வருகைத் தந்த இளைஞர்களுக்குமிடையே இடம்பெற்ற இம்மோதலானது பின்னர் கைகலப்பில் முடிந்தது.

இதில் இளைஞரொருவர் படுகாயமடைந்தார். இந்நிலையில் கிறிக்கெட் போட்டியில் பங்குபற்றிய டெல்வின் தோட்டத்தைச் சேர்ந்தவரும் இளைஞர் ஒருவர், நேற்றுக் காலை, தனது சொந்த தேவைக்காக இறக்குவாணை நகருக்கு வந்தபோது, நகரத்திலுள்ள சில இளைஞர்கள் அவ்விளைஞன் மீதுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

இச்சம்பவத்தை கேள்வியுற்ற தோட்ட இளைஞர்கள், இறக்குவாணை நகருக்குச் சென்று, அங்கிருந்த இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

இத்தாக்குதல் சம்பவத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்து, இறக்குவாணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற மலையக மக்கள் முன்னணியின் உபதலைவரும் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினருமான ரூபன் பெருமாள் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன், நிலைமையை ஆராய்ந்து கல்வி இராஜாங்க அமைச்சர் இராதரகிருஷ்ணனின் கவனத்துக்குக் கொண்டுச் சென்றார்.

இதனையடுத்து, இச்சம்பவத்துடன் தொடர்புடைய 6 இளைஞர்களை இறக்குவாணை பொலிஸார் கைதுசெய்தனர்.

இரு குழுக்களுக்கிடையேயான நீண்டநாள் குரோதமே, இச்சம்பவத்துக்குக் காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே, இருக் குழுக்களுக்குமிடையிலான மோதலை, சுமூகமாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக, இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .