Janu / 2026 ஜனவரி 29 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்ட பகுதியில் இருந்து வியாழக்கிழமை (29) காலை இறந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
லக்சபான தோட்ட, லக்சபான பிரிவில் உள்ள தொழிலாளர்கள் வியாழக்கிழமை (29) காலை பணிக்கு சென்ற வேளை இறந்த நிலையில் கருப்பு நிற சிறுத்தையொன்று கிடப்பதை கண்டு இது தொடர்பாக தோட்ட முகாமையாளருக்கு தகவல் வழங்கியுள்ளனர்
முகாமையாளர் இது குறித்து நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து குறித்த சிறுத்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளதுடன் குறித்த சிறுத்தை மரணித்து மூன்று நாட்கள் ஆகி விட்டதாக நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செ.தி.பெருமாள்

4 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago