2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

இறந்த பூச்சிக்கள், எறும்புகள் கலந்த மதுபானம் விற்பனை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 04 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா. திருஞானம்

இறம்பொடை, தவங்தன்ன பிரதேச மதுபான கடையொன்றில் கொள்வனவு செய்த மதுபான போத்தலில் இறந்த பூச்சிக்கள் மற்றும் எரும்புக்கள் காணப்பட்டதாக நபரொருவர் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த நபர் தனது முறைப்பாட்டில், 'சம்பவதினம் நான் வழமையாக கொள்வனவு செய்யும் மதுபானசாலையில் மதுபானம் கொள்வனவு செய்தேன். அதில் இறந்த பூச்சிக்கள் மற்றும் எரும்புக்கள் காணப்பட்டன. எனவே, இது தொடர்பாக குறித்த மதுபானசாலைக்கும் மது உற்பத்தி நிறுவனத்துக்கும் அறிவித்தேன். எனினும் எந்தப் பலனும் இல்லை. குறித்த மதுபான நிலையம் 03 போத்தில் மதுபானம் தருவதாக கூறி, இந்த பிரச்சினையைக் கை விடுமாறு கூறினர்' எனக் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பான விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மலையகத்தில் காணப்படும் மதுபானசாலைகளில் பொதுவாக விலை குறைந்த, தரம் குறைந்த மதுபானங்களே கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனையே தோட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றன. இதனால் தோட்ட சமூகம் பல சமுக சீர்கேடுகளுக்கும் உள்ளாகின்றன. எனவே, இது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .