R.Maheshwary / 2021 ஜூலை 27 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை மேல் கடைவீதி பகுதி வீடொன்றிலிருந்து 15 வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சிறுமி தனது அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 04 மணியளவில் சிறுமியின் வீட்டார், 119 என்ற அவசர தொலைபேசி ஊடாக வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்றதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதைனையடுத்து, சடலம் தொடர்பில் எல்பொடை நீதிமன்ற நீதாவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு மரண விசாரணையின் பின் சடலம் நேற்று மாலை நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சிறுமியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் சட்ட வைத்தியர் ஊடான பிரேத பரிசோதனை இன்று காலை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
6 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 Jan 2026