2026 ஜனவரி 21, புதன்கிழமை

இறுக்கமும் உருக்கமானதுமான “கடிதம் அனுப்பியுள்ளேன்“

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் பொருளாதாரத்துக்கும்  நிவாரணத்துக்கும் நடுவில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும், மலைய மக்கள் சார்பாக   ஒர் உருக்கமானதும் இறுக்கமான  கடிதத்தை தோட்ட கம்பனிகளுக்கு அனுப்பியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (16) அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், 22 கம்பெனிகளுக்கும் தனது கையெழுத்தில் கடித்தத்தை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக மலையக மக்கள் வறுமையின் உச்சத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, உடனடியாக பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும். அனைத்து பெருந்தோட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் நடைமுறையில் இருக்கின்றன.  அவற்றில் காணப்படுகின்ற நிதிகளை திரட்டி பகுதி அளவிலேனும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றார். 

மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு, உடனடியாக உணவுப் பொருட்களையோ உலர் உணவுப் பொருட்களையோ நிவாரணமாக வழங்க வேண்டும் என   பிரதேச செயலகங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன். பெருந்தோட்ட நிறுவனங்கள் இலாப நோக்கை மட்டுமே மையமாகக் கொண்டு செயற்படுவதை இடைநிறுத்தி மனிதாபிமானமுள்ள மனிதர்களாக செயற்பட வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X