R.Maheshwary / 2022 செப்டெம்பர் 14 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (13) கொழும்பில் நடைபெற்றது.
இலங்கை எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு ஜப்பான் அரசாங்கத்தின் நட்பு ரீதியான உதவிகளுக்கும் இதன் போது இ.தொ.கா நன்றி தெரிவித்தது.
எதிர்வரும் காலங்களில் மலையகத்தில் ஜப்பான் அரசாங்கத்தினூடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தவும்,திறன் மற்றும் தொழில்சார்ந்த கல்வி முறைகளை உருவாக்குவது தொடர்பில் ஜப்பான் நாட்டு துதுவரின் கவனத்திற்கு இ.தொ.கா குழு கொண்டு வந்தது.
மேலும் ஜப்பான் நாட்டிற்கான தொழில் வாய்ப்பு தொடர்பாகவும் இச் சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இச் சத்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்,தலைவர் செந்தில் தொண்டமான், சட்டத்தரணி மாரிமுத்து, இ.தொ.காவின் சிரேஷ்ட உறுப்பினர் மதியுகராஜா,வெளி விவகாரங்களுக்கு பொறுப்பான பாரத் அருள்சாமி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.


15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025