2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

இலவச நடமாடும் சேவை

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

இலவச நடமாடும் சேவையும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும், பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெறவுள்ளது.

தொழிலாளர் தேசியசங்கத்தின் இளைஞர் அணியின் தலைவரும் நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினருமான பா.சிவநேசனின் வேண்டுகோளுக்கிணங்க, மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்ப மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கமைவாக, தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் ஊடாக, இந்த இலவச நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.

அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் நடைபெறும் இந்நடமாடும் சேவையில், தேசிய அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ், திருமண பதிவுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொடுப்பற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொகவந்தலாவை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஐந்து கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், இந்நடமாடும் சேவையில் பங்கேற்று நன்மையடையுமாறு, ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை இந்நிகழ்வின் போது, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், பிரதேச ரீதியில் சித்திபெற்ற மாணவர்களும் அவர்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களும், பாராட்டடி கௌரவிக்கப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .