2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

இளநீர் விற்றவருக்கு ரூ.10,000 தண்டம்

Editorial   / 2023 ஜூலை 23 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இளநீர் விற்பனைச் செய்துக்கொண்டிருந்த வியாபாரி, பகிரங்கமாக மதுபானம் பருகிக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

கண்டி-மஹியாவ ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்ட நபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு கண்டி மேலதிக நீதவான் மொஹமட் ராபி, ரூ.10,000 தண்டம் விதித்தார்.

மஹியாவை பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் நலீம் என்பவருக்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அத்தொகையை செலுத்த தவறின், 6 மாதம் க​டூழிய சிறைத்தண்டனை விதிப்பதற்கும் மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

ஷேன் செனவிரத்ன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X