Freelancer / 2023 மே 31 , பி.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடுகன்னாவ பொத்தபிட்டிய பகுதியில் 18 வயதுடைய யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர்.
லங்காதீப செய்தியின்படி, முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள் ஹதரலியத்த புத்தர் சிலைக்கு அருகில் வைத்து குறித்த யுவதியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
சம்பவத்தில் ஒரு சந்தேகநபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மற்ற மூவரும் முச்சக்கர வண்டிக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தேக நபர்கள் ஏதோவொரு போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததாக அந்த பெண் மேலும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுள் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஏனையோரை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கடுகன்னாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். R
35 minute ago
41 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
41 minute ago
50 minute ago