Janu / 2024 மார்ச் 24 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் எழுச்சி மாநாடு பசறை நூலக கேட்போர் கூட மண்டபத்தில், மலையக மக்கள் முன்னணியின் உப தலைவரும் , மலையக மக்கள் முன்னணியின் கவுன்ஸில் உறுப்பினரும் , முன்னாள் பசறை பிரதேச சபை உறுப்பினருமான கண்மணி சிவநேசன் தலைமையில் சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது .
இந்நிகழ்வில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.
பசறை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து அதிதிகள் அனைவரும் பசறை நூலக கேட்போர் கூடத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் இசை நிகழ்ச்சிகள், கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் இளைஞர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிப்பு இடம்பெற்றுள்ளது .
ராமு தனராஜா




4 minute ago
8 minute ago
17 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
17 minute ago
22 minute ago