2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இ.தொ.காவின் ஏற்பாட்டில் செயலமர்வு

Kogilavani   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பங்களிப்புடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் 'பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க சட்டங்களும், கூட்டுஒப்பந்த செயற்பாடுகளும்' எனும் தலைப்பிலான ஒருநாள் செயலமர்வு, எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு, கொட்டகலை தொழில்நுட்பக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இ.தொ.கா உப தலைவர் எஸ்.அருள்சாமியின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெறவுள்ள இச்செயலமர்வில், தலவாக்கலை, ஹட்டன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 50 தலைவர்களும், தலைவிகளும் பங்குபற்றவுள்ளனர்.

சிறந்தத் தலைவர்களை உருவாக்கும் நோக்கில், இ.தொ.கா நாடளாவிய ரீதியில் செயலமர்வுகளை நடத்தி வருகின்றது.

தோட்டங்களில் நடைபெறும் பிரச்சினைகளை தாமாகவே பேசித் தீர்க்கும் வகையில், தோட்டத்தலைவர்களை வழிபடுத்த வேண்டுமென்பதே, இச்செயலமர்வில் நோக்கமாவுள்ளதாக, இ.தொ.கா தெரிவித்துள்ளது.

இச்செயலமர்வின் ஆரம்பிப்பு நிகழ்வில், இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மூத்த தொழிற்சங்கவாதிகளான பழனிமுத்து, கதிர்வேல் ஆகியோர் கலந்துகொண்டு, கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .