Kogilavani / 2018 மே 06 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மலையக மக்களின் உரிமைக்காகவும் மண்ணுக்காகவும் போராட்டங்களில் உயிர்நீத்த மலையகத் தியாகிகளை நினைவுகூர்வதற்காக, மலையகத் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறதென அறிவித்துள்ள ஈரோஸ் அமைப்பு, இதற்கமைவாக மே 5ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை, மலையகத் தியாகிகள் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாகவும் அறிவுறுத்தினார்.
ஈரோஸ் அமைப்பானது, கடந்த 30 வருடங்களுக்கு மேலாக, மே 11ஆம் திகதியை, மலையகத் தியாகிகள் தினமாக அனுஷ்டித்து வருவதாக, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையகப் பிராந்திய பொறுப்பாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மே 5ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையிலான காலங்களில் மலையகத் தியாகிகள் நினைவாக, கருத்தமர்வுகள், கலந்துரையாடல்கள் என்பன நடைபெற்று, மே 11ஆம் திகதி, பிரதான நினைவேந்தல் நிகழ்வு, ஹட்டன் நகரில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, இவ்வாரத்தில் தியாகிகள் வாழ்ந்த ஊர்களில் உள்ள பொதுமக்கள், தமது இருப்புக்கான போராட்டத்தில் வீர மரணமடைந்தத் தியாகிகளை நினைவுகூர்ந்து, நிகழ்வுகளை நடத்துமாறும் கோரியுள்ள அவர், அத்தோடு மலையகத்தில் உள்ள அனைத்து அரசியல், தொழிற்சங்க, சமூக அமைப்புகள் மற்றும் சமூகப் பற்றாளர்களை இதில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago