Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
பதுளையிலிருந்து கொழும்பு வரை பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (19) பகல் மணியளவில், வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வட்டவளைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, உயிரிழந்த நபரின் சடலம் உடரட்ட மெனிகே ரயிலிலேயே நாவலப்பிட்டி ரயில் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர் யாரென்பது குறித்து, அடையாளம் காண்பதற்கான நடவடிக்கையை வட்டவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .