Freelancer / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயில், தலவாக்கலை வடகொட நிலையத்திற்கு அருகில் புதன்கிழமை (13) பிற்பகல் 3.30 மணியளவில் தடம் புரண்டது.
அந்த ரயிலின் இயந்திரம் மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும், அந்த தண்டவாளத்தில் ஓடும் ரயில்களை நிலையத்தின் மற்றைய தண்டவாளத்தின் ஊடாக இயக்க முடியும் எனவும் வடகொட புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தடம் புரண்ட உடரட்ட மெனிக்கே ரயிலின் இயந்திரம் ரயில் இருந்து அகற்றப்பட்டு நடைமேடை ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாவலப்பிட்டியவில் இருந்து வரவழைக்கப்படும் மற்றுமொரு ரயிலில் பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago