R.Maheshwary / 2021 டிசெம்பர் 16 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சதீஸ்
மஸ்கெலியா பிரதேசசபையின் உபதவிசாளர், பெரியசாமி பிரதீபன் மீது தாக்குதல் மேற்கொண்ட இரண்டு உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (15) இரவு இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 13ம் திகதி மஸ்கெலியா பிரதேசசபையின் உபதவிசாளர், பெரியசாமி பிரதிபனை, சபைஅமர்வின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரும் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உறுப்பினர் ஒருவரும் தாக்கியதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மஸ்கெலியா பிரதேசசபை
உறுப்பினர் பி.அனந்தராஜ், மற்றும் மஸ்கெலியா பிரதேசசபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் எஸ்.ஏ.திஷாநாயக்க ஆகிய இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், தாக்குதலால் காயமடைந்த உப தவிசாளர் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .