2026 ஜனவரி 21, புதன்கிழமை

உரத்தால் இராகலையில் பதற்றம்

Ilango Bharathy   / 2021 ஜூன் 25 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

இராகலை நகரில், உரத்தைப்  பதுக்கி வைத்து, அதை கூடுதலான விலைக்கு விற்பனை செய்துவந்த வர்த்தகர் ஒருவரை  இன்று(25) காலை  இராகலை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.


 

குறித்த வர்த்தகர் தனது வீட்டிலும்,கடையிலும் மற்றும் அவருடைய களஞ்சியசாலையிலும் இரசாயன உரவகைகளை பதுக்கி வைத்திருந்ததுடன் 1,300 ரூபாய்க்கு விற்பனை செய்யவேண்டிய 50 கிலோ கிராம் எடை கொண்ட உர மூட்டைகளை 5,000 ரூபாய் தொடக்கம் 6,000 ரூபாய் வரை விற்பனை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  அப்பகுதியிலுள்ள விவசாயிகள் குறித்த நபரின்  வீட்டை முற்றுகையிற்று, அங்கிருந்த ஒரு தொகை உரத்தை கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், அவரின்  கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் நகரில் சுமார் மூன்று மணிநேரம் அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த நிலையில், இராகலை பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்ததையடுத்து குறித்த வர்த்தகரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

மேலும் கடந்த ஒருமாதத்துக்கு முன், இந்த வர்த்தகர் பதுக்கி வைத்திருந்த ஆயிரக்கணக்கான உரமூட்டைகள் நுகர்வோர் அதிகார சபையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, அது விவசாயிகளுக்கு 1,5000 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X