Editorial / 2025 நவம்பர் 11 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை உருவள்ளி தோட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் சிறுத்தை புலி ஒன்று செவ்வாய்க்கிழமை (11) அன்று உயிருடன் சிக்கியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்
ஆலயத்தை திறந்து ஆலயத்தில் உள்ள பணிகளை முன்னெடுப்பதற்கு ஆலயத்திற்கு வந்த குருக்கள் சிறுத்தையை கண்டுள்ளார்.
இது தொடர்பாக பொதுமக்கள் அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் ஊடாக நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சிறுத்தையை பிடிப்பதற்கு வனவிலங்கு அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வரவிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுத்தை சாமி கும்பிடுவதற்கு வந்ததோ... என அங்குள்ள மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
6 minute ago
33 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
33 minute ago
54 minute ago
1 hours ago