Editorial / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா மாகாணத்தில் இடம்பெறும் இடமாற்றங்கள், தேவையற்று மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவித்தும், அதற்கு எதிராகவும், வெலிமடை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் கதிர்வீச்சு விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்களுக்கு நிலுவையில் உள்ள மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, அரச கதிர்வீச்சு விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், நேற்றைய (12) தினம், ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டது.
இந்த பணிப்புறக்கணிப்புக் காரணமாக, ஊவாக மாகாணத்தின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும், எக்ஸ் கதிர் உள்ளிட்ட எவ்வித கதிர்வீச்சுடன் தொடர்புடைய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் பிரச்சினை தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய தீர்வை வழங்காவிடின், எதிர்வரும் 19ஆம் திகதி, நாடளாவிய ரீதியில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, கதிர்வீச்சு விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago