ஆ.ரமேஸ் / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிந்துலை, நாகசேனை பிரதேசத்தின் பிரதான தபால் நிலையத்தின் ஊடாக, அப்பிரதேச பெருந்தோட்டப் பகுதிகளுக்கு, தபால் ஊழியர்களால் தினமும் விநியோகிகப்படும் தபால்கள், உரிய காலத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்குச் சென்றடைவதில்லை என, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளர்.
நாகசேணை பிரதேசத்தில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலான காலப்பகுதியிலேயே இவ்வாறான நிலை தோன்றியுள்ளதாகவும் இது தொடர்பில், உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகசேனை பிரதான தபால் நிலையத்தில் இருந்து, லிந்துலை, மெராயா, திஸ்பனை, ராணிவத்தை, வலகா, பம்பரகலை, அகரகந்தை, டில்லுகுற்றி, நோனா தோட்டம், டிமலை ஆகிய பிரதேச தோட்டப்பகுதிகளுக்கும் தலங்கந்தை, மிளகுசேனை, மவுசாலை போன்ற பல கிராமப்பகுதிகளுக்கும், தபால் விநியோகிகப்பட்டு வருகின்றன.
இந்த தபால் நிலையத்தில், 10க்கும் அதிகமானோர், தபால் விநியோகத்தர்களாக பணியாற்றி வருவதாகவும் தபால்கள் அனைத்தும் உரிய நேரத்துக்கு வந்து கிடைக்காதமையால், அரசாங்க திணைக்கள அழைப்புகளுக்கு உரிய நேரத்தில் ஆஜராக முடியாமை, அடகு வைக்கும் நகைகளை மீட்க முடியாமை, வாகனங்களுக்கான காப்புறுதிகளை செலுத்த முடியாமை, தொழில்களுக்கான நேர்முகப்பரீட்சைகளுக்குச் செல்ல முடியாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள்காணப்படுவதாக, தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
28 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago