2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2017 மார்ச் 21 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.சதிஸ்

பொகவந்தலாவை  தேயிலை தொழிற்சாலைக்கு அண்மித்த  காட்டுப்பகுதியிலிருந்து, உருக்குழைந்த  நிலையில், ஆணின் சடலத்தை  பொலிஸார் இன்று மாலை மீட்டுள்ளனர்.

கொட்டியாகலை மேற் பிரிவைச்சேர்ந்த  முனியான்டி சங்கர் (வயது 43) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்

மேற்படி நபரை கடந்த பத்து நாட்களாக காணவில்லை என உறவினர்கள் பொகவந்தலாவை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மனைவி வெளிநாட்டில் பணிப்புரிந்து வருவதாகவும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .