2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

உலக்கையில் உலகை துறந்த மாணவி

Editorial   / 2023 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவி ஒருவர் உலக்கையில் உயிரை விட்ட சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.

லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா மகா வித்தியாலத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவியே இவ்வாறு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

விஜயகுமார் பபிலாஷினி (வயது 19) என்ற மாணவியே தன்னுடைய வீட்டில் திங்கட்கிழமை (14) தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.   

மின்னியலாளரான தந்தை தோட்டத்தில் பணிக்கு  சென்றுவிட்டார், நகரத்துக்கு தாய் சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

கதவுக்கும் அலுமாரிக்கும் இடையில் உலக்கை குறுக்காக இருந்துள்ளது. நாற்காலியும் அவ்விடத்தில் சரிந்து கிடந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் சகோதரியும் சகோதரனும் பல்கலைக்கழகங்களில் கற்று வருகின்றனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X