Kogilavani / 2016 மே 13 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ
மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேற்றப்பட்டு கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெட்டிகல மக்களுக்கு, தொடர்ந்து உலருணவுப் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சப்ரகமுவை மாகாண சபை உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன், மாகாண சபையிடம் கோரியுள்ளார்.
மேற்படித் தோட்டத்தில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர், மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் புதன்கிழமை(11) இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டதுடன் அவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 29 மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
மேற்படி 106 பேரையும் நேற்று(12) நேரில் சென்று பார்வையிட்ட மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன், அவர்களுக்கு தொடர்ந்து உலருணவு பொருட்களை பெற்றுகொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சப்ரகமுவ மாகாண பதில் முதலமைச்சரும் கிராமிய அபிவிருத்தி சிறுவர் பராமரிப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சருமான ரஞ்ஜித் பண்டாரவின் கவனத்துக்கு கொண்டு சென்றதற்கமைவாக இவ் உலருணவு பொருட்கள் தொடர்ந்து அம்மக்களுக்கு வழங்கப்படவுள்ளன.
மாகாண சபை சமூக சேவைகள் அமைச்சின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக குறித்த இடத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள், பகல் வேலைகளில் மண்சரிவு அபாயம் உள்ள இடத்துக்குச் சென்று வருவதாக பிரதேச மக்கள் தகவல் வழங்கியுள்ளனர். எனவே, மண்சரிவு அபாயமுள்ள இடத்துக்கு மக்களை செல்ல வேண்டாமென மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் கோரியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .