2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

உளநல வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பவுள்ளது

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நதீக தயா பண்டார

பாடசாலைகள் திறக்கப்பட்டதும் செயற்திறனில் பின்னடைவை சந்தித்துள்ள மாணவர்களுக்காக உளநல வேலைத்திட்டம் ஒன்றை, மத்திய மாகாணத்துக்குள்
செயற்படுத்தவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் லலித்.யூ.கமகேவின் ஆலோசனைக்கமைய, மத்திய
மாகாண கல்வி அமைச்சு, மாகாண கல்வி திணைக்களங்கள், மற்றும் பேராதனை
பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தெளிவுப்படும் மற்றும் மத்திய மாகாண பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாடசாலைகள் நீண்டகாலம் மூடப்பட்டுள்ளதால், அவர்களை மீண்டும் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தவும் அவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கான சிறந்த மனநிலையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பை
எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த மாதம் 21ஆம் திகதி, மத்திய மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு குறைந்த மாணவர் தொகையைக் கொண்ட 850 பாடசாலைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துயள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .