Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
பாலித ஆரியவன்ச / 2017 நவம்பர் 20 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலந்தாழ்த்தாது நடத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரவுள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றம் நாளை(22) தீர்ப்பளிக்கவுள்ளது.
கொழும்பு, கண்டி, ஹாலி எல மாத்தறை மற்றும் எம்பிலிபிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 6 வாக்காளர்களால், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், மேற்படி மனு, கடந்த 16ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில், 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என, நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில், உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்ந்தும் காலந்தாழ்த்தப்படுவதால், மக்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும் எனவே, உடனடியாக இந்தத் தேர்தலை நடத்துவதற்கு அனுமதிக்குமாறும், மேற்படி மனுவை
தள்ளுபடி செய்யுமாறும்தாம் நாளைய தினம், நீதிமன்றில் கோரவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
செவன சேவா திட்டத்தின் கீழ், பதுளை ரம்புக்கனையில் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
“உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கக் கோரி மற்றுமொரு குழு தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இந்தக் குழுவினர் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் அல்லர். இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியும். அதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை பறித்தெடுக்கும் உரிமை ஸ்ரீ.சு.காவுக்குக் கிடையாது. எனினும், இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஆவண செய்யுமாறு கோரியும், நாமும் நீதிமன்றத்தை நாடவுள்ளோம்”
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
2 hours ago