2025 ஜூலை 05, சனிக்கிழமை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் “பெண்களுக்கு இடம்வழங்க கூட்டணித் தயார்”

Editorial   / 2017 நவம்பர் 09 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

“உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான கட்சிகள் இப்போதுதான் பெண் வேட்பாளர்களைத் தேடி அலைகின்றனர். ஆனால், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் செயற்பாட்டு அரசியலில், ஏற்கெனவே பெண்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அவர்களை வேட்பாளர்களாகக் களம் இறக்கி பெண்களுக்கு உரிய இடத்தை வழங்கத் தயாராக உள்ளோம்” என்று, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் தொடர்பில், கூட்டணியின் செயற்பாட்டாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு, நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஆச்சர்ய மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,

“கட்சி செயற்பாட்டாளர்கள், தொண்டர்களாக அல்லாமல் அரசியல் தெரிந்தவர்களாக, இருக்க வேண்டும் என்பதில், அதிகம் அக்கறை காட்டுகின்றவன் என்ற வகையில், எமது கட்சி செயற்பாட்டாளர்களுக்கு, இதுபோன்ற பல செயலமர்வுகளை கட்சி மட்டத்தில் நடத்தி வருகின்றேன்.

புதியத் தேர்தல் முறை தொடர்பாகவும் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் விளக்கமளிப்பு கூட்டங்கள் எனது வழிநடத்தலில் இடம்பெற்றுள்ளன.

“புதிய தேர்தல்முறையின் பிரகாரம், வட்டாரமுறை மட்டுமல்லாது பெண்களுக்கும் உரிய இடம்வழங்கப்பட வேண்டுமென சட்ட ஏற்பாடு உள்ளது. இதனால் பல கட்சிகள், இப்போதுதான் பெண்களைத் ஆரம்பித்துள்ளதாக, தேர்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

“ஆனால், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகள், ஏற்கெனவே தமது கட்சிகளில் மகளிர் அணிகளைக் கொண்டு சிறப்பாக செயற்பட்டு வருவதால், இப்போது அவர்களுக்கான தேர்தல் வாய்ப்புகளை இலகுவாகப் பெற்றுக்கொடுக்கத் தயாராக உள்ளது.

“கூட்டணியில்,மாகாண சபை உறுப்பினராக பெண்ணொருவரும் உள்ளார். எனவே, எதிர்வரும் காலங்களில் பெண் அரசியல்வாதிகளை பலரை நாம் உருவாக்குவோம்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .