2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் 20 பேர் காயம்

Editorial   / 2017 ஜூன் 15 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், சுஜிதா

 

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை - மட்டுக்கலை சந்தியில், உழவு இயந்திரம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 20 பேர் காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து, இன்று (15) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக, லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை லெமிலியர் தோட்டத்தில் இருந்து மட்டுக்கலை டி.ஆர்.ஐ தோட்ட  தேயிலை மலைக்கு வேலைக்காக உழவு இயந்திரத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட தோட்டத் தொழிலாளர்களே, இவ்வாறு விபத்துக்குள்ளாளகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .